புதுக்கோட்டை

விவசாயிகளுக்கான பண்ணைப்பள்ளி பயிற்சி

DIN

கந்தர்வகோட்டை வட்டாரம், புதுநகர் கிராமத்தில் மக்காச்சோளப் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை  குறித்து விவசாயிகளுக்கான பண்ணைப்பள்ளி  பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது . 
கந்தர்வகோட்டை வேளாண் உதவி இயக்குநர் மு. சங்கரலட்சுமி  தலைமை வகித்தார்.  அட்மா ஆலோசனைக் குழு  உறுப்பினர் முத்து, உதவி தொழில்நுட்ப மேலாளர் செ. சங்கீதா,  கா. சுப்பிரமணியன் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் சக்திவேல், ரமேஷ், ரூபன்சீயன்னா, ஸ்ரீதர் , சிபிச்சக்கரவர்த்தி, வசந்தகுமார் , விவேகானந்தன், சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
கந்தர்வகோட்டை வேளாண் உதவி இயக்குநர் மு. சங்கரலட்சுமி  பண்ணைப்பள்ளி பயிற்சியில் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மக்காச் சோளப்பயிரில் விதை நேர்த்தி செய்வதன் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.
மேலும் வேளாண் கல்லூரிமாணவர் சக்திவேல்  உயிர்  உரங்களின் அவசியத்தை விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் செ. சங்கீதா வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கா. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT