புதுக்கோட்டை

"நீரா பானத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகளை நீக்க வேண்டும்'

DIN

நீரா பானத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகளை தமிழக அரசு நீக்க வேண்டும் என்றார் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலரும், கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ. நல்லசாமி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியது:
தமிழகத்தில்  நெல் கொள்முதல் நிலையங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அங்கு விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.25  லஞ்சம் பெறப்படுகிறது.  இலவசம், மானியம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் அரசு லஞ்சம் வாங்குவதை ஏன்  கண்டுகொள்ளவில்லை.  தமிழக அரசு ஊழல் இல்லாத நிர்வாகம்  செய்ய வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும்,  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலைப் பாதிக்கப்பட்ட பிறகும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நடிகர்கள் அரசியலுக்கு வரத் துடிக்கினறனர். அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தகுதியுள்ளவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும். 
உலகத்தில் எந்தநாட்டிலும் கள்ளுக்குத் தடையில்லாத போது தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்குத் தடை விதித்துள்ளனர். இது உலகளாவிய நடைமுறைக்கு எதிரானது. நீரா இறக்குவதற்கு அரசு அனுமதி தேவையில்லை. நீரா பானத்தை இறக்குவதற்கு அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. நிபந்தனையின்றி நீரா இறக்க அரசு அனுமதிக்க வேண்டும். டாஸ்மாக் விற்பனை குறையக்கூடாது என்பதற்காகவே நீரா இறக்க பல நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. நீராவிற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்திவிட்டு, நீராவில் கலப்படம் செய்வோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நல்லசாமி.
பேட்டியின் போது, கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

SCROLL FOR NEXT