முகப்பு
புதுக்கோட்டை

கணவர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக் காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கணவரை கொன்ற மனைவி அவரது கள்ளக்காதலனுக்கு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கணவரை கொன்ற மனைவி அவரது கள்ளக்காதலனுக்கு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது.
ஆலங்குடி, குறிஞ்சிநகரைச்  சேர்ந்தவர் சி. புஷ்பராஜ் (42), வெளிநாட்டில் வேலை செய்து  வந்தார். இவரது மனைவி ராதாவுக்கும்(32) புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செல்லிடபேசி பழுதுநீக்கும் கடை வைத்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த சி. கைலாசத்துக்கும் (33) கூடாநட்பு ஏற்பட்டது.
வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய புஷ்பராஜுக்கு வந்த விவரம் தெரியவந்து மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால்   அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2014 டிச.18-ல் ராதாவும், கைலாசமும் சேர்ந்து  புஷ்பராஜை கட்டையால் அடித்துக்  கொன்றனர்.  இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்த ஆலங்குடி போலீஸார்  இருவரையும் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டக் கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிங்ஸ்லி கிறிஸ்டோபர், கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ராதா, கைலாசத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →