புதுக்கோட்டை

விராலிப்பட்டி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்

DIN

கந்தர்வகோட்டை தாலுகா விராலிப்பட்டி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் வியாழகிழமை நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட மண்டல துணை வட்டாட்சியர் வ. ராமசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வட்டாட்சியர் க. பொன்மலர் முன்னிலை வகித்துப் பேசினார். 
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஒ) அ.ராமசாமி கலந்து கொண்டு தலைமை வகித்தார். முகாமில், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்களில் 65 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு சுமார் ரூ. 2 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி பொதுமக்களிடம் பேசினார். 
முகாமில், பெறப்பட்ட மனுக்களை துறை வாரியாகப் பிரித்து 15 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்க கேட்டுக் கொண்டார். முகாமில், வாரிசுச் சான்றிதழ்18 பேருக்கும், பட்டா மாறுதல் 15 பேருக்கும், விதவை சான்று 11 பேருக்கும், முதியோர் உதவித்தொகை 3 பேருக்கும், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமண உதவித்தொகை 2 பேருக்கும், இறப்பு நிவாரணம் 7 பேருக்கும், வீட்டுமனை பட்டா 4 பேருக்கும் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  முகாமில், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், கிராம நிர்வாக உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திராளாகக் கலந்து கொண்டனர். இறுதியாக வட்டாட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) சீனிவாசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT