புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கார் மோதி 2 இளைஞர்கள் சாவு: உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

DIN

ஆலங்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு காரணமான ஓட்டுர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அணவயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ்(19), துலுக்கவிடுதி கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் பாலமுருகன்(24). இவர்கள் இருவரும் வடகாட்டுக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மாங்காடு பூச்சிகடை பகுதியில் சென்ற போது, எதிரே வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ், பாலமுருகன் இருவரும் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். காரில் வந்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே புனல்வாசலைச் சேர்ந்த இருவர் தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து, அங்கு திரண்ட இருவரது உறவினர்கள், கிராம மக்கள்,  கார் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி இருவரது சடலங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். 
சம்பவ இடத்துக்குச் சென்ற ஆலங்குடி வட்டாட்சியர் ரத்னாவதி, காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலிப் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியல் போராட்டம் காரணமாக ஆலங்குடி- பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT