முகப்பு
புதுக்கோட்டை

உணவு பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட் டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகளவில்

Updated On : 15 மே, 2018 at 4:10 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

புதுக்கோட் டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த உணவு பாதுகாப்பு மையத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அரசு முதன்மைச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சம்பு கல்லோலிகர் முன்னிலை வகித்தார்.
மையத்தை திறந்து வைத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: உணவு பாதுகாப்புத் துறை மூலம் பொதுமக்களுக்கு தரமான உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை காலத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களில் உணவு பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவு பாதுகாப்பு மையம் மே மாதம் முழுவதும் செயல்படும். இம்மையத்தின் மூலம் கோடை காலத்தில் பொதுமக்கள் எந்தவிதமான உணவு பொருள்களை சாப்பிடுவது, தவிர்க்க வேண்டியவை, கலப்படப் பொருள்களைக் கண்டறிதல் உள்ளிட்ட விபரங்கள் பயிற்சி பெற்றமகளிர் சுயஉதவிக் குழுவினர் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பர். உணவின் தரம் குறித்து 94440-42322 என்ற செல்பேசியில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, சார் ஆட்சியர் கே.எம்.சரயு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு, நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.