முகப்பு
புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞர் சாவு

அன்னவாசல் அருகே கல்குவாரியில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 22 மே, 2018 at 2:45 AM
பகிர்:

அன்னவாசல் அருகே கல்குவாரியில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
அன்னவாசல் அருகே மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்த செல்வமணி(37), செல்வம்(37), முனியான்டி(33), கார்த்திக்(30) ஆகியோர் அப்பகுதியில் மலையடி கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் குளித்தனர்.
அப்போது, செல்வமணி மூழ்கியதையடுத்து, மற்ற மூவரும் தேடியும் உடலை மீட்க முடியவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கருணாநிதி தலைமையிலான வீரர்கள் 8 மணி நேரம் போராடி செல்வமணி உடலை மீட்டனர். இதுகுறித்து அன்னவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.