புதுக்கோட்டை

புதுகை திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆர்டிஓ ஆய்வு

DIN

புதுக்கோட்டையில் சர்கார் திரைப்படம் திரையிட்டுள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அந்த திரையரங்குகளில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
தீபாவளியன்று நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் திரைப்படம் வெளியாகி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. புதுகையில் 3 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சு.கணேஷூக்கு தகவல் கிடைத்துள்ளது. 
தகவலைத் தொடர்ந்து திரையரங்குகளில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் வணிகவரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதிகாரிகள் உள்ளே சென்று ரசிகர்களிடம் டிக்கெட் விலை குறித்து விசாரித்தனர். ஆய்வின்போது, 6 ஆம் தேதியிலிருந்து டிக்கெட்  விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
ஆய்வுக்குப் பின்னர்   வருவாய் கோட்டாட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது டிக்கெட் கவுண்டரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்படவில்லை. 
ஆனால் ஆன்லைனில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனினும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தடை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT