புதுக்கோட்டை

கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

DIN

பொன்னமராவதி வட்டார கல்வி நிறுவனங்களில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளிக்கு வந்த குழந்தைகளின் நெற்றியில் ஆசிரியர்கள் திலகமிட்டு இனிப்பு வழங்கி வரவேற்றனர்.  
பள்ளி முதல்வர் வே.முருகேசன், தனி அலுவலர் நெ.ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வாழ்த்துக்களை மாணவர்களிடம் பரிமாறிக் கொண்டனர். 
திருக்களம்பூர் அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பல்வேறு வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் கவிதா, ஆசிரியர் ராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொன்னமராவதி சிட்டி அரிமா சங்கம் சார்பில் கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, க.புதுப்பட்டி, கேசராபட்டி தொடக்கப்பள்ளி, வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் ஆகிய பள்ளிகளில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள், இனிப்பு வழங்கப்பட்டது. 
கேசராபட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு  நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. 
சிட்டி அரிமா சங்கத் தலைவர் ஜெ.பிரவீன்குமார், செயலர் கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் பி.ரவிச்சந்திரன், கண்டியாநத்தம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ப.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட் டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் ஜவாஹர்லால் நேரு பிறந்ததினம் குழந்தைகள் தினமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
குழந்தைகளை வரவேற்கும் விதமாக பள்ளியின் நுழைவாயிலில் பலூன், பொம்மை தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 
விழாவிற்கு தலைமை வகித்த பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். துணை முதல்வர் குமாரவேல், ஆசிரியர்கள் கௌரி, ராஜாமணி, ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT