புதுக்கோட்டை

பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கக் கூட்டம்

DIN

புதுக்கோட்டையில் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் தல. சீனிவாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அமைச்சுப் பணியாளர்களுக்கும் இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் , அலுவலக மேலாளர் பணி வழங்க வேண்டும்.  பள்ளிக் கல்வித் துறையில் நேரடி நியமனம் மூலம்  உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவதை கைவிட வேண்டும்.
ஆய்வக உதவியாளர்களை பணி மாறுதல் மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT