விராச்சிலையில் இன்று திருமண விழா: முதல்வர் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் திங்கள்கிழமை நடைபெற உள்ள திருமண விழாவில் முதல்வர் கலந்து
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் திங்கள்கிழமை நடைபெற உள்ள திருமண விழாவில் முதல்வர் கலந்து கொள்ள இருப்பதையொட்டி முன்னேற்பாடு பணிகளை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவரும், அதிமுக மாவட்டச் செயலருமான பி.கே.வைரமுத்து இல்ல திருமண விழா திங்கள்கிழமை (அக்.22) நடைபெறுகிறது.
இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். விழா நடைபெறும் இடம், முக்கிய பிரமுகர்கள் வருகை, சிறப்பு விருந்தினர்கள் அமரும் இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.