முகப்பு
புதுக்கோட்டை

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் போராட்ட ஆயத்த மாநாடு

புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போராட்ட ஆயத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:49 AM
பகிர்:

புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போராட்ட ஆயத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின்  மாவட்டத்  தலைவர் ஜீவன் ராஜ் தலைமை வகித்தார். இதில் மாநில செயலர்கள் ஹேமலதா, முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டம் குறித்து பேசினர்.
மாநாட்டில், செப். 29 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இதில், சங்கத்தின் மாவட்டச்செயலர் வின்சென்ட், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.