புதுக்கோட்டை

பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற செப்.28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

DIN

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பதற்கு தற்காலிக உரிமம் கோரி செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சு.கணேஷ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையொட்டி புதுகை மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க தற்காலிக பட்டாசு உரிமம் கோரி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை செப்டம்பர் 28 ஆம் தேதி முன்னதாக புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற படிவம்-5 பிரதிகள், உரிமம் கோரும் இடத்தின் நில வரைபடம் 5 பிரதிகள், உரிய கணக்கு தலைப்பின் கீழ் அரசுக் கட்டணம் ரூ.500-யை வங்கியில் செலுத்தியதற்கான அசல் செலுத்துச்சீட்டு போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு!

SCROLL FOR NEXT