புதுக்கோட்டை

சூரியூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

DIN

விராலிமலை வட்டம், சூரியூரில் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விராலிமலை வட்டாட்சியர் ஜெ. சதீஷ்சரவணகுமார் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் காமராஜ் முன்னிலை வகித்தார். நீர்பழனி பகுதியின் வருவாய் ஆய்வாளர் ஜோதி நிர்மலாராணி வரவேற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடு, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 25 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அவை மேல்நடவடிக்கைக்காக தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
சூரியூர் கிராம நிர்வாக அலுவலர் கவிச்சக்ராணு நன்றி கூறினார். இதில் விராலிமலை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், சூரியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராசு மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT