புதுக்கோட்டை

கல்விக் கொள்கையை  எதிர்த்து அரிமளத்தில் கருத்தரங்கு

DIN

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர் அமைப்புகளின் சார்பில் கல்வி உரிமைக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் நடைபெற்றது.
கல்விக் கொள்கை எதிர்ப்பியக்கக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் வட்டார ஒருங்கிணைப்பாளர் மா. குமரேசன் தலைமை வகித்தார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் மல்லிகா, அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சாமிநாதன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட நிர்வாகி முத்து, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக வட்டாரத் தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் துணைத் தலைவர் கருப்பையா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பேச்சியம்மாள் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT