புதுக்கோட்டை

பிளாஸ்டிக் கொடிகள் கூடாது: ஆட்சியர்

DIN

காகிதம் மற்றும் துணியால் ஆன கொடிகளையே சுதந்திர தின விழாவின்போது பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: தமிழக அரசின் தடையால் இந்த முறை பிளாஸ்டிக் கொடிகள் அற்ற சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.  பிளாஸ்டிக் கொடிகள் விற்கப்படுவது தெரிய வந்தால் மாவட்ட நிர்வாகம் மூலம் கடைகளில் சோதனையிடவும் அவற்றைப் பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த அடிப்படையில் காகிதம், துணியால் ஆன கொடிகளையே சுதந்திர தின விழாவின் போது பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  தனியார் அமைப்புகளும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT