புதுக்கோட்டை

மருத்துவ மதிப்பீட்டு முகாம் விழிப்புணர்வுப் பேரணி

DIN

பொன்னமராவதியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம் சார்பில் வரும் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது.  இம்முகாமில்  21 குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறன் கொண்டவர்களை மருத்துவர்கள் மற்றும் உடல் இயக்க நிபுணர்கள் மூலம் பரிசோதனை மூலம் கண்டறிந்து அவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட உள்ளது. 
இதற்கான விழிப்புணர்வு பேரணியை வட்டார கல்வி அலுவலர் ராஜாசந்திரன், வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடஙகிவைத்தனர். 
வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர். செல்வக்குமார் வரவேற்றார். வட்டார வள மையத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியே சென்று மீண்டும் வட்டார வள மையத்தில் நிறைவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT