புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெற்றோரே நம்பிக்கை தர வேண்டும்

DIN

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பெற்றோரே நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி மேலும் பேசியது: மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தை குறைபாடோடு பிறந்துள்ளதே என கவலைப்படக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும் சிறந்த குழந்தைகள்தான். அவர்களுக்கு பெற்றோராகிய நீங்கள்தான் நம்பிக்கை கொடுக்க வேண்டும். அவர்களிடம் உள்ள திறனை கண்டறிந்து பயிற்சி அளித்தால் அவர்களை சிறந்த குழந்தைகளாக மாற்ற முடியும் என்றார்.
புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சின்னத்தம்பி உள்ளிட்டோர் பேசினர். முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் ஜான்,கண்மருத்துவர் சுமதி,காது மூக்கு தொண்டை மருத்துவர் சுதர்சன்,மனநல மருத்துவர் ராதிகா ,குழந்தைகள் நல மருத்துவர் மகேஷ்வரி ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் எஸ். ராஜேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிகல்வி உதவித் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ்  தலைமையில் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT