புதுக்கோட்டை

பயங்கரவாதிகள் ஊடுருவல் தகவல்: புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

DIN

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக மத்திய உளவுத் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில்  தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழுமக் காவல்துறையினர், வியாழக்கிழமை இரவு முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மணமேல்குடி அருகிலுள்ள மும்பாலை சோதனைச் சாவடியில் கடலோரப் பாதுகாப்புக்  குழும ஆய்வாளர் அன்னலட்சுமி தலைமையில்,  உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், ஜவஹர் மற்றும் காவலர்கள் வாகனங்களை சோதனையிட்டு அனுப்புகின்றனர். சேமங்கோட்டை  சோதனைச் சாவடியில் கடலோரக் காவல் உதவி ஆய்வாளர் பா.ரகுபதி மற்றும் காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 தீவிரவாதிகள் அல்லது சந்தேக நபர்கள் யாரேனும் தென்பட்டால், அவர்கள் குறித்த விவரங்களை கடலோரப் பாதுகாப்புக் குழும இலவச தொலைபேசி எண் 1093-க்கு  தகவல் தெரிவிக்கும்படி, கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவக் கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கட்டுமாவடிமுதல்  ஏனாதி வரையிலான  32 கடலோர மீனவக் கிராமங்களிலும், காவலர்கள் ரோந்துப் பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT