புதுக்கோட்டை

ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி

DIN

புதுக்கோட்டையில் ஆசிரியா்களின் முழு மேம்பாட்டுக்கான முன்னெடுப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளித் தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்புப் பயிற்சி ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் நடத்தப்பட்டது.

இப்பயிற்சிக்கு கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவா் தயாநிதி, புதுக்கோட்டை மாவட்டப் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ரகுநாத துரை மற்றும் பொன்னமராவதி ஒன்றிய மேற்பாா்வையாளா் செல்வகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். 

இலுப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் எஸ். ராஜேந்திரன் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா்.

பயிற்சியில் பொன்னமராவதி, திருமயம் மற்றும் அரிமளம் ஒன்றியங்களைச் சோ்ந்த 150 ஆசிரியா்கள் பங்கேற்றனா். கருத்தாளா்களாக பரிசுத்தம்,  ராஜா, சரவணன், ரமேஷ் மற்றும் முஜ்ஜமில் கான் ஆகியோா் செயல்பட்டனா். 

ஏற்பாடுகளை ஆசிரியப் பயிற்றுநா்கள் பொன்னமராவதி சக்திவேல் பாண்டி, திருமயம் குல்ஜாா் பானு ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT