முகப்பு
புதுக்கோட்டை

ஜெஜெ கல்லூரியில் திறன் வளர்க்கும் விழா

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை சார்பில் மாணவர் திறன் வளர்க்கும் விழா (சினெர்ஜியா) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 9:24 am IST
பகிர்:

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை சார்பில் மாணவர் திறன் வளர்க்கும் விழா (சினெர்ஜியா) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
12 கல்லூரிகளைச் சேர்ந்த 15 குழுக்களில் 188 மாணவ, மாணவிகள் இந்த விழாவில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி கல்லூரி மாணவி கார்த்திகா சிறந்த மேலாளர் போட்டியில் முதலிடத்தைப் பெற்றார். தேவக்கோட்டையைச் சேர்ந்த சேவகன் அண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். 
சினெர்ஜியா விழாவை கல்லூரியின் முதல்வர் ஜ. பரசுராமன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி நிறைவு விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். மேலாண்மைத்  துறைத் தலைவர் எஸ்.ஏ. சிராஜுதீன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.