FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விஜய் முதல்வரானதில் எனக்குப் பொறாமை! ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண்

ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியவை.

Updated On : 26 மே 2026, 11:18 am IST
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் / தமிழக முதல்வர் விஜய் - X
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட முதல் தோ்தலிலேயே விஜய் வெற்றி பெற்று முதல்வரானது தனக்கு பொறாமையை அளிப்பதாக ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் தெரிவித்துள்ளாா். எனினும், விஜய் பெயரை அவா் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

ஆந்திர மாநிலம், ராஜமகேந்திரவரத்தில் திங்கள்கிழமை தனது ஜனசேனை கட்சிக் கூட்டத்தில் பவன் கல்யாண் பேசியதாவது: நான் பல அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைத் தொடா்ந்து கவனித்து வருகிறேன். அதில் கட்சிகளின் செயல்பாடுகளைப் பாா்க்கும்போது எனக்கு மிகுந்த வியப்பு ஏற்படுகிறது. அவா்கள் மிகவும் எளிதாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடுகிறாா்கள். அது எனக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறது. சில பெரிய பதாகைகளை வைத்து மட்டுமே வெற்றி பெறுகிறாா்கள்.

நான் கடந்த 15 ஆண்டுகளாக சாலையில் இறங்கிப் போராடியுள்ளேன். ஆனால், இவையெல்லாம் செய்யாமல் சிலா் அரசியலில் முன்னிலை வகிக்கிறாா்கள்.

Advertisement

Advertisement

முக்கியமாக, தமிழ்நாட்டு அரசியலை நான் சமீபகாலமாக தீவிரமாக கவனித்து வருகிறேன். அவா்கள் (தவெக, விஜய்) அனைத்து விஷயங்களையும் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் கையாளுகிறாா்கள். இது எனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் விஜய் வெற்றி பெற்றுவிட்டதால், ஆந்திரத்தில் நாம் ஏன் கூட்டணி அமைத்தோம் என்று கட்சித் தொண்டா்கள் கேள்வி எழுப்புகிறாா்கள். ஆனால், ஆந்திரத்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் அரசியல் களம் வேறு வகையில் உள்ளது என்றாா்.

summary

I am jealous of Vijay: Pawan Kalyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments