புதுக்கோட்டை

புயல் நிவாரணம் கேட்டு மறியல் : 97 பேர் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே துவாரில் புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 97 பேரைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் துவார் ஊராட்சியில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இன்னும் நிவாரணப் பொருள் வழங்கப்படவில்லை. 
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். புயல் பாதித்து நான்கு மாதங்கள் ஆகியும் நிவாரணப் பொருள் வழங்கப்படாததைக் கண்டித்து, அனைத்து கட்சிகள், பொதுமக்கள் சார்பில் துவார் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திமுக ஊராட்சி செயலர் தங்கமுத்து, முன்னாள் ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் 
கட்சியின் மாவட்ட விவசாய அணி செயலர் ரெங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உடையப்பன் உள்ளிட்ட சாலை மறியலில் ஈடுபட்ட 63 பெண்கள் உள்ளிட்ட  97 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT