புதுக்கோட்டை

அரிமளம் சிவகமலம் மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் சிவகமலம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. 
அரிமளம் சிவகமலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் ஆண்டு விழா பள்ளியின் நிறுவனர் தங்கவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தாளாளர் சபரிதங்கவேல் முன்னிலை வகித்தார். விழாவில், திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியது:
மாணவ, மாணவிகள்  தன்னம்பிக்கை, விடாமுயற்சியோடு செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம். படிப்புக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் தொடர்பு கிடையாது. படிப்பு என்பது உலக அறிவை வளர்த்து கொள்வதற்கானது. நமக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் என்றும் நினைவில் வைத்து அவர்கள் கற்றுக்கொடுத்த வழியில் நடக்க வேண்டும். ஆசிரியர்கள் இரண்டாவது தாய், தந்தைகள். அவர்களை வணங்க வேண்டும், மதிப்பு அளிக்க வேண்டும். யாருக்கு எந்தத் துறை பிடிக்கின்றதோ அதைத் தேர்ந்தேடுத்து அந்த துறையில் பெரியளவில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
விழாவில், சென்னை புத்துணர்வு பயிற்சி மைய தலைமை நிர்வாக அதிகாரி கீர்தன்யா கிருஷ்ண மூர்த்தி, கேந்திரா வித்யாலயா ஆசிரியர் கமலா உள்ளிடோர் வாழ்த்துரை வழங்கினர்.தொடர்ந்து பள்ளி, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, காஷ்மீரில் தீவரிவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT