புதுக்கோட்டை

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு  புத்தாடைகள்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில்  பகல்நேரப் பாதுகாப்பு மைய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை புத்தாடைகள் வழங்கப்பட்டன.
பொன்னமராவதி வட்டார வள மையத்தில் பகல் நேரப் பாதுகாப்பு மையத்தில் 20 மாற்றுத் திறனாளிகள் கல்விப் பயின்று வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில், வட்டாரக் கல்வி அலுவலர் ராஜா சந்திரன், அவரது மனைவி கவிதா ஆகியோர் தங்கள் சொந்த செலவில் புத்தாடைகளை செவ்வாய்க்கிழமை வழங்கினர். வட்டாரக்கல்வி அலுவலர் பால்டேவிட் ரொசாரியோ, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார், வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் விக்டர்பால்தேவநேசன் மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.
ஆசிரியப் பயிற்றுனர்கள் பரிசுத்தம், அன்பழகன், பச்சைமுத்து, மதனகுமார், ரஹிமாபானு, புவனேஸ்வரி,ரோகினி, உயலியக்க நிபுனர் தங்கவேலு ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT