புதுக்கோட்டை

விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணையப் பயிற்சி

பொன்னமராவதி அருகேயுள்ள மேலமேலநிலை கிராமத்தில் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணையம் அமைத்தல் தொடர்பான பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

DIN

பொன்னமராவதி அருகேயுள்ள மேலமேலநிலை கிராமத்தில் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணையம் அமைத்தல் தொடர்பான பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பொன்னமராவதி வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் சிவராணி தலைமைவகித்து உழவர் ஆர்வலர் குழு அமைப்பதற்கான அடிப்படை விவரங்கள், கடைபிடிக்கவேண்டிய முக்கிய விதிகள், பதிவேடுகள் பராமரிப்பு, உழவன் செயலி செயல்பாடுகள் குறித்து விளக்கினார். 
துணை வேளாண் அலுவலர் முருகன் கூட்டுப் பண்ணையத்தின் அங்கங்கள், திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார். உழவர் உற்பத்தியாளர் குழு அமைத்தல்,  அதன் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு, பொருளாதார மேம்பாட்டு முறை குறித்து வேளாண் அலுவலர் சுபத்ரா விளக்கினார். 
பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன. 
முன்னதாக வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் ரவிராஜன் வரவேற்றார். 
உதவி தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT