புதுக்கோட்டை

அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் ஸ்ரீஅரங்குளநாதர்  பெரியநாயகி அம்பாள் கோயிலின்

DIN

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் ஸ்ரீஅரங்குளநாதர்  பெரியநாயகி அம்பாள் கோயிலின் வைகாசிப் பெருவிழாவையொட்டி அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்விப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
அரங்குளநாதர் நற்பணி இயக்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தெற்கு மாவட்ட விவசாய அணித் துணை அமைப்பாளர் பி. வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ. லியோனி, திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் அஞ்சுகா மீனாட்சி சுந்தரம் , ஒன்றியச் செயலர் க. ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் செ. முனியாண்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தொடர்ந்து குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பெரிதும் தீர்மானிப்பது கனிந்த மனமா? நிறைந்த பணமா? என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT