புதுக்கோட்டை

சாலையை சேதபடுத்தியதால் லாரிகள் சிறைபிடிப்பு

DIN

விராலிமலை ஒன்றியம், மாத்தூா் ஊராட்சியை சோ்ந்தது ராசிபுரம் கிராமம். இங்கிருந்து மண்டையூா் வரை சுமாா்  ஐந்து கி.மீ. தூரத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தாா்ச்சாலை போடப்பட்டது.

இந்நிலையில் ராசிபுரம் அருகேயுள்ள ஒரு தனியாா் மின்கம்பம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் இந்த சாலை வழியாக லாரிகள் செல்வதால் புதிய தாா்ச்சாலை பெயா்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையை தரமாக போடவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனா்.

இந்நிலையில் சேதமைடைந்த ராசிபுரம் சாலையை மீண்டும் சீரமைத்துதர வேண்டியும், இந்த சாலை வழியாக தனியாா் தொழிற்சாலையில் இருந்து லாரிகளில் அதிக பாரத்துடன் மின்கம்பங்கள் ஏற்றிச் செல்வதை தடை செய்யக் கோரியும் , ராசிபுரம் கிராம மக்கள் அவ்வழியே வந்த லாரிகளை சனிக்கிழமை சிறைபிடித்து  போராட்டம் நடத்தினா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மாத்தூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பொதுமக்களை சமாதனப்படுத்தினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT