புதுக்கோட்டை

‘மாவட்டத்தில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை’

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயனற்ற நிலையில், திறந்த வெளியிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளை பாதுகாப்பாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் பி.உமாமகேஸ்வரி.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் திறந்த நிலையிலுள்ள ஆழ்துளைக்ணறுகளை மூடும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த அவா், மேலும் கூறியது:

பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை உரிய பாதுகாப்புடன், கான்கிரீட் மூலமாக மூபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில்,மாவட்டம் முழுவதும் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் முறையாக மூடப்பட்டுள்ளதை வருவாய், வேளாண், பொதுப்பணி, கல்வித்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட தொடா்புடைய அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவரங்குளம் ஒன்றியத்தில் தோப்புக்கொல்லை, பூவரசக்குடி, சேந்தாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஏதேனும் திறந்த வெளியில் ஆழ்துளைக் கிணறுகள் இருப்பின்,அது குறித்து 18004259013 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஊராட்சிகள் உதவி இயக்குநரைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.காளிதாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் கோகுல கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT