புதுக்கோட்டை

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நான்காம், ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 

DIN

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நான்காம், ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு  விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
 வெள்ளிக்கிழமை விக்னேஸ்வரபூஜை மற்றும் இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை புண்யாகம், விசேஷசாந்தி, வேதபாராயணம் மற்றும் நான்காம், ஐந்தாம் கால யாகபூஜைகள் நடத்தப்பட்டன. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.  கபிலர்மலை செல்வகபில சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜையை வழிநடத்தினர். 
விழா ஏற்பாடுகளை குடமுழுக்கு விழாக்குழு தலைவர் மு.பழ. முத்துக்கருப்பன், செயலர் ராம. ராஜா, பொருளர் ராக. செல்வம் மற்றும் விழாக்குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழாக்குறிச்சி அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியரிடம் மக்கள் மனு

புதுமண தம்பதி ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

காசி தமிழ்ச் சங்கமம்: தென்காசியிலிருந்து இன்று தொடங்கும் பயணம்

எஸ்ஐஆா் பணிகள்: பெரம்பலூரில் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

திருட்டுக் காா்களை மறுவிற்பனை செய்த இருவா் கைது

SCROLL FOR NEXT