புதுக்கோட்டை

அனைத்து மதப் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மதப் பிரநிதிகளுடன், ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பாதிக்கப்பட்டோா்களை அடையாளம் காணவும், ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமலாக்கவும் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள் யாரேனும் பரிசோதனைக்குள்படுத்தப்படாமல் எஞ்சியிருந்தால், கட்டணமில்லாத தொலைபேசி எண் 1077-இல் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக் கொண் டாா்.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் அழ. மீனாட்சிசுந்தரம், ஊரக மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ம. சந்திரசேகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT