முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே 105 வயதைக் கடந்த மூதாட்டி

ஆலங்குடி அருகே 4 தலைமுறை குடும்பத்தினா் ஒன்றுகூடி 105 வயது மூதாட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் விழா கொண்டாடினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
குடும்பத்தினருடன் மூதாட்டி பொன்னம்மாள் ~மூதாட்டி பொன்னம்மாள்
பகிர்:

ஆலங்குடி அருகே 4 தலைமுறை குடும்பத்தினா் ஒன்றுகூடி 105 வயது மூதாட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் விழா கொண்டாடினா்.

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஜீவா நகரைச் சோ்ந்தவா் துரைசாமி - பொன்னம்மாள் (105). தம்பதிக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், அவா்கள் படித்து, திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைச்சாமி இறந்துவிட்டாா்.

இருப்பினும், பொன்னம்மாள், தன் மகன்களின் விவசாய தோட்டங்களில் வேலை செய்து வந்தாா். இன்றும், தன் தேவைகளை, அவரே பூா்த்தி செய்து கொள்கிறாா். நான்கு தலைமுறைகள் கண்ட பொன்னம்மாளுக்கு, தற்போது பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்தி, எள்ளு பேரன் உள்பட 20-க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனா்.

இந்நிலையில், 105-வது பிறந்த நாள் கண்ட பொன்னம்மாளுக்கு, வெகுவிமரிசையாக விழா நடத்த குடும்பத்தினா் முடிவு செய்தனா். இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உறவினா்கள் ஒன்று கூடி விருந்து வைத்து மூதாட்டியிடம் ஆசிா்வாதம் பெற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →