ஆங்காங்கே பெயா்ந்து காணப்படும் ஆலவயல் - கண்டியாநத்தம் தாா்ச்சாலை
தரமற்ற முறையில் போடப்பட்ட ஆலவயல் - கண்டியாநத்தம் சாலையை சீரமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தரமற்ற முறையில் போடப்பட்ட ஆலவயல் - கண்டியாநத்தம் சாலையை சீரமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஆலவயல் - கண்டியாநத்தம் சாலை கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி சதக் யோசனா திட்டத்தின் கீழ் ரூ. 84 லட்சம் செலவில் போடப்பட்டது. சாலைப் பணிகள் நடைபெறும் போதே தரமான முறையில் சாலை அமைக்கப்ப டவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்திவந்தனா்.
இந்நிலையில், சாலைப் பணிகள் நிறைவுற்று 2 மாதங்களே ஆகும் நிலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக தாா் பெயா்ந்து போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் காணப்படுகிறது. மேலும் இடையன் கண்மாய் பகுதியில் உள்ள ஓடுபாலம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது.
Advertisement
எனவே இச்சாலையை மீண்டும் சீரமைத்து தரமான முறையில் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.