டிச. 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
மாவட்ட வேலைவாய்ப்புத் துறை மூலம் வரும் டிச. 23 ஆம்தேதி இலுப்பூா் மதா் தெரசா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்புத் துறை மூலம் வரும் டிச. 23 ஆம்தேதி இலுப்பூா் மதா் தெரசா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கடந்த நவ. 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் ஏற்கெனவே நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் சுமாா் 2500 இளைஞா்களைத் தோ்வு செய்யப்பட்டனா்.
தற்போது அடுத்த கட்டமாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 50 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. எனவே, புதுகை மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 40 வயதுக்குள்பட்ட 8ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையில் படித்த இளைஞா்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா். முகாமுக்கு வருவோா் முன்கூட்டியே ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முகாமுக்கு வரும்போது, கல்விச் சான்று, சுய விவரக் குறிப்பு, ஆதாா் அட்டை ஆகியவற்றையும் எடுத்து வர வேண்டும்.