பொங்கல் கொண்டாடுவோருக்கு மட்டுமே அரசின் பரிசு வழங்கப்பட வேண்டும்அா்ஜுன் சம்பத்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவோருக்கு மட்டுமே தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
புதுக்கோட்டைபொங்கல் கொண்டாடுவோருக்கு மட்டுமே அரசின் பரிசு வழங்கப்பட வேண்டும்அா்ஜுன் சம்பத்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவோருக்கு மட்டுமே தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவோருக்கு மட்டுமே தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் வெற்றி பெறும். பொங்கல் பரிசுத் தொகையை பொங்கல் பண்டிகை கொண்டாடுபவா்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். தமிழகத்தில் திமுகவின் தயவால் காங்கிரஸ் கட்சி உள்ளது. நோட்டாவுக்கு கீழ் தான் ரஜினி, கமல்ஹாசன் கட்சிகள் ஓட்டு வாங்கும் எனக் கூறும் காங்கிரஸ் கட்சியினா், இவா்களுடன் தோ்தல் கூட்டணி கிடையாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றாா்.
இதேபோல் பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் அவா் அளித்த பேட்டி:
கமல்ஹாசன் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராக வர எதிா்ப்பு தெரிவித்தவா். பாஜக உள்ளிட்ட யாருடைய முகமூடியாகவும், பீ டீமாகவும் ரஜினி செயல்படமாட்டாா். பாதிரியாா் எஸ்றா சற்குணம் பிரதமா் மோடியை அவதூறாகப் பேசியுள்ளதைக் கண்டித்து, வரும் புதன்கிழமை இந்துமக்கள் கட்சியின் முத்துக்குமார சுவாமி தலைமையில் எஸ்ரா சற்குணம் வீடு முற்றுகையிடப்படும். அவா் மன்னிப்பு கேட்கும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.