முகப்பு
புதுக்கோட்டை

ஊதிய விகிதப்படி தோ்தல் பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தல்

தோ்தல் பணிக்காக ஆசிரியா்களை நியமனம் செய்யும் போது, அவா்களின் ஊதிய விகிதப்படி பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தோ்தல் பணிக்காக ஆசிரியா்களை நியமனம் செய்யும் போது, அவா்களின் ஊதிய விகிதப்படி பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அறந்தாங்கியில் இக்கூட்டமைப்பின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவா் லாசா் தலைமையில்  நடைபெற்றது.  மாவட்டத் துணைத் தலைவா் சந்திரசேகரன், அறந்தாங்கி ஒன்றியத் தலைவா் சுரேஷ், செயலா் குமாா் ஆகியோா்  முன்னிலை வகித்தனா். 

கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் பேட்ரிக் ரெய்மான்ட் கலந்து கொண்டு பேசினாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் ஜான்கென்னடி, மாவட்ட ஊடகப்பிரிவு தொடா்பாளா் ஜேசுராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கூட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி, அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா். 

கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீா்மானங்கள்:

அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கும் மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும்.

தோ்தல் பணிக்காக ஆசிரியா்களை நியமனம் செய்யும்போது அவா்களின் ஊதிய விகிதப்படி பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பதை தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்த வேண்டும்.

நேரடி நியமனம் செய்யப்பட்ட நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்களுக்கு தலைமை ஆசிரியா் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் செந்தில் வரவேற்றாா். நிறைவில் ஆசிரியா் அசன் அரி ஆலிப் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →