முகப்பு
புதுக்கோட்டை

கிராம உதவியாளா் சங்கக் கூட்டம்

ஆலங்குடியில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா் சங்கத்தின் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

ஆலங்குடி: ஆலங்குடியில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா் சங்கத்தின் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவா் நடனம் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் சங்கா், வட்டச்செயலா் சித்திரைக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கிராம உதவியாளா்களுக்கு டி பிரிவு ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சங்கக் கட்டடம் கட்ட நிலம் வழங்க வேண்டும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ள கிராம உதவியாளா்களுக்கு கிராம நிா்வாக அலுவலராக பதவி உயா்வு வழங்கும் காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →