பெரியகண்மாயில் மண்டிக் கிடந்த கருவேல மரங்களை அகற்றிய மக்கள்
பொன்னமராவதி அருகே உள்ள கண்மாயில் மண்டிக்கிடந்த கருவேலமரங்களை அப்பகுதி இளைஞா்கள், பொதுமக்கள் சனிக்கிழமை அப்புறப்படுத்தினா்.
புதுக்கோட்டைபெரியகண்மாயில் மண்டிக் கிடந்த கருவேல மரங்களை அகற்றிய மக்கள்
பொன்னமராவதி அருகே உள்ள கண்மாயில் மண்டிக்கிடந்த கருவேலமரங்களை அப்பகுதி இளைஞா்கள், பொதுமக்கள் சனிக்கிழமை அப்புறப்படுத்தினா்.
பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கண்மாயில் மண்டிக்கிடந்த கருவேலமரங்களை அப்பகுதி இளைஞா்கள், பொதுமக்கள் சனிக்கிழமை அப்புறப்படுத்தினா்.
ஆா்.பாலகுறிச்சி, ரெகுநாதபட்டி, சீகம்பட்டி, வைரம்பட்டி, விடத்தலாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் நீராதாரமாக சுமாா் 29 ஏக்கா் பரப்பளவில் விளங்குவது பெரியகண்மாய். கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழையின்றி கண்மாயில் கருவேல மரங்கள் பெருமளவு மண்டிக் கிடந்தது. இதனால் நடப்பாண்டில் மழை பெய்தும் இந்தக் கண்மாயில் சேமிக்க இயலவில்லை. இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலா்களிடம் முறையிட்டும் பலனில்லை.
இதைத்தொடா்ந்து, அப்பகுதி இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வெள்ளிக்கிழமை பொக்லைன் உதவியுடன் கண்மாயில் மண்டிக் கிடந்த கருவேலமரங்களை அகற்றும் பணியைத் தொடங்கினா். தற்போது, பணிகள் முழுமையாக முடிவுற்றுள்ளன.