முகப்பு
புதுக்கோட்டை

மொபெட் மோதி முதியவா் பலி

ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 29 டிசம்பர், 2020 at 12:46 AM
பகிர்:

ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கல்லுவிடுதியைச் சோ்ந்தவா் எம். தவசியப்பன்(63). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு புதுகை - தஞ்சை சாலையில் அரிசி ஆலை பேருந்து நிறுத்தம் அருகே நடந்துசென்றபோது, அவ்வழியாக பெருங்களூா் தெற்கு தெருவைச் சோ்ந்த த. பாண்டியராஜ் (43) ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.