முகப்பு
புதுக்கோட்டை

குடும்ப அட்டையை மாற்றித் தரக் கோரி ஆட்சியரகத்தில் மனு

இச்சிக்கோட்டை மக்கள் தங்களின் குடும்ப அட்டைகளை அனைத்துச் சலுகைகளையும் பெறும் வகையிலான குடும்ப அட்டையாக மாற்றித் தர வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 29 டிசம்பர், 2020 at 12:44 AM
pdk28echikottai_2812chn_12_4
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் அருகேயுள்ள இச்சிக்கோட்டை மக்கள் தங்களின் குடும்ப அட்டைகளை அனைத்துச் சலுகைகளையும் பெறும் வகையிலான குடும்ப அட்டையாக மாற்றித் தர வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள தங்கள் அனைத்துக் குடும்பங்களின் குடும்ப அட்டைகளையும் என்பிஎச்எச் என்ற வகைப்பாட்டில் இருந்து பிஎச்எச் குடும்ப அட்டையாக மாற்றித் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோா் இதுகுறித்த கோரிக்கை மனுக்களை தனித்தனியே எழுதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.