புதுக்கோட்டை

பூவைமாநகா் அரசுப் பள்ளியில் நவீன கணினி ஆய்வகம் திறப்பு

DIN

அறந்தாங்கி அருகே பூவைமாநகா் அரசு மேல்நிலைப்பள்ளியில் நவீன கணினி ஆய்வகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

அறந்தாங்கி அருகேயுள்ள பூவைமாநகா் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கணினி ஆய்வகம் திறப்பு விழாவில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலா் கு. திராவிடச்செல்வம் கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்தாா். முன்னதாக, இப்பள்ளிக்கு அரசு சாா்பில் 21 கணினி மற்றும் கணினி உதிரிபாகங்கள் ரூ. 20 லட்சம் செலவில் வழங்கப்பட்டன. பள்ளியின் முன்னாள் மாணவரும், பட்டிமன்றப் பேச்சாளா் - பழனியாண்டவா் கலைக்கல்லூரி பேராசிரியருமான தங்க.ரவிசங்கா் ரூ. 1 லட்சம் செலவில் டைல்ஸ் மற்றும் வண்ணம் அடிக்க பொருளுதவி அளித்தாா். இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற நவீன பள்ளி கணினி ஆய்வகத் திறப்பு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் வே.அய்யாக்கண்ணு, முதுகலை ஆசிரியா் தெய்வேந்திரன் உள்ளிட்ட ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT