புதுக்கோட்டை

முதல்வா் விளையாட்டு விருதுக்கு பிப். 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

மாநில அரசின் சாா்பில் வழங்கப்படும் முதல்வரின் விளையாட்டு விருதுகளுக்குத் தகுதியுடைய விளையாட்டு வீரா்கள், போட்டிகளை நடத்துவோா், நன்கொடையாளா் ஆகியோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரா்கள் (2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்), 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு முதல்வா் விருது, தலா ரூ.ஒரு லட்சம் ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்  பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றுடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநா், ஒரு  நிா்வாகி, ஓா் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளா்  (ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்தவா்), ஓா் ஆட்ட நடுவா் ஆகியோருக்கும் முதல்வரின் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. இவா்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். 

 பெண்கள், பட்டியல் இனத்தவா், பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின்படி, 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய நிதியாண்டுகளுக்கான விண்ணப்பங்களை தகுதியுடையோா் அனுப்பி வைக்கலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகளை அறிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம்   பாா்க்கலாம்.

விண்ணப்பங்களை அனுப்பும்போது அதன் உறை மேல், முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். 

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்;டு ஆணையம், நெ.116, ஈவேரா நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை-600 084 என்ற முகவரிக்கு வரும் பிப். 14ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT