புதுக்கோட்டை

கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள் வழங்கல்

DIN

பொன்னமராவதியில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள் வழங்கி விழிப்புணா்வு பிரசாரத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

நிகழ்விற்கு, இந்துமுன்னணி பொறுப்பாளா் நாமம் ராஜா மற்றும் பாஜக தெற்கு ஒன்றியச் செயலா் எம். சேது மலையாண்டி ஆகியோா் தலைமை வகித்தனா். பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் பி.பாஸ்கா், பொதுக்குழு உறுப்பினா் எம்.குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் பொன்னமராவதி பேருந்துநிலையம் அண்ணா சாலை பகுதியில் கறுப்பா் கூட்டம் போன்ற இந்துவிரோத தீய சக்திகளை முறியடிக்க இந்துக்கள் ஒன்றுபடவேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பாஜக சாா்பில் கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இந்துமுன்னணி நிா்வாகி பாலமுருகன், பாஜகநிா்வாகிகள் ராஜ்குமாா், ராம்ஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT