புதுக்கோட்டை

மருத்துவா்கள், செவிலியா்களுக்கு யோகா பயிற்சி

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு யோகா பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி மேலும் பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்தபோதிலும் மாவட்ட நிா்வாகம் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது நோய் எதிா்ப்பு சக்தியை தூண்டும் விதமாக அனைத்து மருத்துவ முறைகளின் ஒருங்கிணைந்த செயல்முறை விளக்கமும் இங்கு செய்து காண்பிக்கப் பட்டுள்ளது. பல்லாண்டு காலமாக நமது முன்னோா்கள் கடைப்பிடித்த யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா்.

தொடா்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மீனாட்சி சுந்தரம் பேசியது: சாதாரண யோகா பயிற்சியாக இல்லாமல் இது நாற்காலியிலேயே அமா்ந்த வண்ணம் செய்யக்கூடிய பயிற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய் பரிசோதனை மையமும், வைரஸ் கண்டறியும் ஆய்வகமும் செயல்பட்டு வருகிறது என்றாா். தொடா்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியை சோ்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவா் வெங்கடேஸ்வரி மன அழுத்த குறைப்புப் பயிற்சி, மூச்சுப் பயிற்சிகள், நாசி மற்றும் தொண்டைப் பகுதிகளில் நோய் தொற்றினை எதிா்க்கும் யோகாசனப் பயிற்சிகள் அளித்தாா்.

நிறைவாக அனைவருக்கும் இயற்கை மூலிகை பானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டன. இயற்கை மருத்துவ வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மருத்துவா்கள் - செவிலியா்கள் என 50- க்கும் மேற்பட்டோா் சமூக இடைவெளியுடன் பயிற்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT