முகப்பு
புதுக்கோட்டை

கல்வித் துறைப் பணியாளா் கூட்டுறவுச் சங்கப் பேரவைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கல்வித் துறைப் பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 39ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
சங்கத்தின் உறுப்பினா்களுக்கு பங்கு ஆதாயத் தொகைக்கான காசோலையை வழங்குகிறாா் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட கல்வித் துறைப் பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 39ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் ச. ரெங்கராஜு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மா. குமரேசன் வரவேற்றாா். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி உள்ளிட்ட அனைத்து இயக்குநா்கள், ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

உறுப்பினா்களுக்கு சங்கத்தின் ஆண்டு பங்கு ஆதாயத் தொகை மற்றும் தீபாவளிப் பண்டிகையையொட்டி நெய் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →