முகப்பு
புதுக்கோட்டை

தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பினா் ஆலோசனை

பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தை அறிந்து உடனடியாக பள்ளிகளைத் திறக்க வேண்டும் என தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தை அறிந்து உடனடியாக பள்ளிகளைத் திறக்க வேண்டும் என தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டையில் தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பினா் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தலைவா் அஸ்பா் அன்சாரி தலைமை வகித்தாா். செயல்தலைவா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நிகழாண்டிலேயே நா்சரி பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயா்த்தவேண்டும்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, 2019 - 20 கல்விக் கட்டண நிலுவையை உடனே மெட்ரிக். பள்ளிகளுக்கு வழங்க வேண்டும், பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தை அறிந்து உடனடியாக பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இயற்றப்பட்டன.

இதில், கெளரவத் தலைவா் சேகா், மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி, அற்புத அலெக்சாண்டா், ராஜ், பஷீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →