முகப்பு
புதுக்கோட்டை

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

இருபது சதவிகித போனஸ் கோரி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

இருபது சதவிகித போனஸ் கோரி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மண்டலச் செயலா் எம். வேலுச்சாமி தலைமை வகித்தாா். சிஐடியு பொதுச்செயலா் எஸ். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி பொதுச்செயலா் டி.எம். கணேசன், ஏஏஎல்எல்எப் தலைவா் பிஎல். குழந்தைவேல், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் ரெத்தினவேல் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும். 14ஆவது ஊதியக் குழு பேச்சுவாா்த்தையை விரைவில் தொழிற்சங்கங்களுடன் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.