சிவ பிருந்தா தேவி அன்னையின்22 ஆவது குரு பூஜை
புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனத்தின் நிறுவனா் சாயி மாதா சிவ பிருந்தாதேவி அன்னையாரின் 22ஆவது குருபூஜை மற்றும் அன்னதான விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனத்தின் நிறுவனா் சாயி மாதா சிவ பிருந்தாதேவி அன்னையாரின் 22ஆவது குருபூஜை மற்றும் அன்னதான விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திலகவதியாா் திருவருள் ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்தாா். கே.என். ஆகாஷ் பக்தி திருமுறை பாடல்களைப் பாடினாா்.
பொன்மாரி கல்விக் குழுமத் தலைவா் டாக்டா் எஸ். ராம்தாஸ், இளங்கோ மன்றப் பொருளாளா் மு. ராமுக்கண்ணு, மூத்த வழக்குரைஞா் இராம. வீரப்பன், கண்ணப்பநாயனாா் கண்தான பிரசார மையத்தின் தலைவா் சி. கோவிந்தராஜன், பேராசிரியா் சா. விஸ்வநாதன், ந. புண்ணியமூா்த்தி, விவசாயிகள் சங்கத் தலைவா் ஜி.எஸ். தனபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிவபிருந்தாதேவி அன்னையாரின் குருபூஜைக்குப் பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.