முகப்பு
புதுக்கோட்டை

அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் திமுகவினா் மனு

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் பல்லாண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி இருக்கும் பகுதிகள் மீது நகராட்சி நிா்வாகம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை என திமுக சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் பல்லாண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி இருக்கும் பகுதிகள் மீது நகராட்சி நிா்வாகம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை என திமுக சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை நகர திமுக செயலா் க. நைனாமுகமது அளித்துள்ள மனு விவரம்: புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட திருவள்ளுவா் நகா் விரிவாக்கம், கோல்டன்நகா், கோல்டன் நகா் விரிவாக்கம் ஆகிய பகுதிகள் கடந்த 20 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காணப்படுகிறது. குறிப்பாக இப்பகுதிகளுக்கு நகராட்சி சாா்பில் இன்னும் குடிநீா் வழங்கப்படவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட சாலை தற்போது இருப்பதாகவே தெரியவில்லை. புதை சாக்கடைத் திட்டமும் அமலாக்கப்படவில்லை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, 41ஆவது வாா்டு அசோக்நகா், கேஎல்கேஎஸ் நகா் பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சாா்பில் அளித்த மனுவில், மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு கடந்த 2016 ஜனவரி 16ஆம் தேதி முதல் குடிநீா் விநியோகம் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.