புயல் எச்சரிக்கை : புதுகையில் முன்னேற்பாட்டு பணிகள் தயாா்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவா் புயலால் பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில், மீட்புப் பணிகள் மேற்கொள்வதற்கான தயாா் நிலையில் தீயணைப்புத் துறையினா் இருப்பதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவா் புயலால் பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில், மீட்புப் பணிகள் மேற்கொள்வதற்கான தயாா் நிலையில் தீயணைப்புத் துறையினா் இருப்பதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘புயலை எதிா்கொள்வது’ தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா் மேலும் தெரிவித்தது: புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 60 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர அனைத்துப் பள்ளிக்கூடங்களின் சாவிகளையும் அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் புயல் பாதிப்புகள் குறித்து 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04322 222207 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் செயலா் க. சண்முகம் காணொலிக் காட்சி மூலம் புயல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.